முல்லைதீவில் ஊடகவியலாளர்கள் இருவர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் பக்கச்சார்பற்ற விசாரணைகளை முன்னெடுக்குமாறு அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று(செவ்வாய்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல்ல இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.
முல்லைதீவில் ஊடகவியலாளர்கள் இருவர் தாக்கப்பட்டுள்ள சம்பவம் தொடர்பில் பக்கச்சார்பற்ற விசாரணை நடத்தி, உரிய சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொலிஸாருக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் எனவும் அவர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.