முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் இடத்தில் நாளை காலை நினைவேந்தல்!

0

முள்ளிவாய்க்கால் தமிழின பேரவலம் இடம்பெற்று 11ஆவது ஆண்டு பூர்த்தியாகின்ற நிலையில் நாளை திங்கட்கிழமை முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெறும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

நினைவேந்தல் குழுவின் இணைத்தலைவர்களில் ஒருவரான அருட்தந்தை லியோ ஆம்ஸ்ட்ரோங் இதனைத் தெரிவித்துள்ளார்.

அத்துடன், இன்று காலை முல்லைத்தீவு மாவட்ட பொலிஸ் அதிகாரிகள் எமக்கு அழைப்பு விடுத்திருந்ததாகவும், அவர்களுக்கு நாளைய தின நிகழ்வுகள் குறித்து அவர்களுக்கு தெளிவுபடுத்தியிருந்தாக அவர் குறிப்பிட்டார்.

அதற்கமைய நாளைய தினம் காலை 10.30 மணிக்கு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் இடத்தில் பொதுச்சுடர் ஏற்றப்படவுள்ளதுடன், அகவணக்கம் செலுத்தப்படவுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன்போது கொள்கை பிரகடனமும் வெளியிடவுள்ளதாக நினைவேந்தல் குழுவின் இணைத்தலைவர்களில் ஒருவரான அருட்தந்தை லியோ ஆம்ஸ்ட்ரோங் தெரிவித்துள்ளார்.

நாட்டில் கொரோனா அச்சுறுத்தல் காணப்படும் நிலையில் நாட்டின் சட்ட திட்டங்களுக்கு அமைய குறித்த நிகழ்வு இடம்பெறவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.