முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வினை மட்டக்களப்பில் நடத்துவதற்கு கூட்டமைப்பினைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் உட்பட 26 பேருக்கு தடை

0

மட்டக்களப்பு 12 பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வினை நடத்துவதற்கு  26 பேருக்கு தடை உத்தரவு நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், சமூக சேவை அமைப்புக்கள் உள்ளிட்ட 26 பேருக்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.