தொடர்ந்தும் கொரோனாவினால் மரணிக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்கள் தகனம் செய்யப்படுவதால் முஸ்லிம்கள் மருத்துவமனைக்குச் செல்ல தயக்கம் காட்டியுள்ளனர் என்று நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன் நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
சில அரசாங்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் புனித குர்ஆன், தகனம் செய்வதைத் தடை செய்யவில்லை என்று தவறாக கூறுகிறார்கள்.
எனினும் உண்மையை புரிந்து கொள்ள ஒருவர் குர்ஆனை நேர்மையான முறையில் படிக்க வேண்டும்,” என்று அவர் கூறினார்.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் கொரோனாவினால் பலியான ஒரு குழந்தை தகனம் செய்யப்பட்டதால், முஸ்லிம்கள் வருத்தமடைந்துள்ளனர்,” என்றும் அவர் குறிப்பிட்டார்.
காத்தன்குடி உள்ளிட்ட முஸ்லீம் பகுதிகளை தனிமைப்படுத்தியதால் முஸ்லிம் வர்த்தகர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்