மூடப்பட்டது கொழும்பு குணசிங்கபுர முஹந்திரம் ஒழுங்கை

0

கொழும்பு குணசிங்கபுர முஹந்திரம் ஒழுங்கை பகுதி மூடப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொரோனா தொற்று சந்தேகத்தில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த ஒருவர் தப்பிவந்து குறித்த பகுதியில் இருந்துள்ளார்.

அத்துடன், அவருடன் பழகியிருந்த இருவர் அங்கிருந்து சுகாதார பிரிவினரால் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

இதனைத் தொடர்ந்தே குறித்த பகுதி தற்போது மூடப்பட்டுள்ளதாக பொலஸார் தெரிவித்துள்ளனர்.