மூன்றாம் அலை எதிர்வரும் மே மாதத்தில் நாட்டை தாக்கும் – தொடர்ந்தும் எச்சரிக்கை

0

புதுவருட நிகழ்வுகளின் போது பொதுமக்கள் சுகாதார வழிகாட்டல்களை கவனத்தில் கொள்ளாமை காரணமாக கோவிட் வைரஸின் மூன்றாம் அலை எதிர்வரும் மே மாதத்தில் நாட்டை தாக்கும் என்று பொது சுகாதார கண்காணிப்பாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.

பல தடவைகள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள போதிலும் பொதுமக்கள் நாளாந்த வாழ்க்கையில் கோவிட் தொற்றுக்கு எதிரான சுகாதார வழிகாட்டுதல்களை புறக்கணித்து வருகின்றனர்.

திருமதி இலங்கை அழகுராணி, சுற்றாடல் பிரச்சினை, எண்ணெய் பிரச்சினை ஆகியவற்றினால் மிகத்தீவிரமான கோவிட் வைரஸ் பிரச்சினையானது மறைக்கப்பட்டுள்ளதாக பொது சுகாதார கண்காணிப்பாளர்கள் சங்கத்தின் செயலாளர் மஹேந்திர பாலசூரிய தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில், இதன் விளைவாக கோவிட் தொற்று இயல்பு நிலைக்கு வந்துவிட்டது என்று பொதுமக்கள் கருதுகின்றனர்.

இந்த நிலையில் கோவிட் தொடர்பான அச்சத்தை மீண்டும் ஒரு முறை பொதுமக்களிடையே ஏற்படுத்துவது கடினம். இது மிகவும் துரதிர்ஷ்டவசமானது.

மூன்றாவது அலை நம்மைத் தாக்கும் போது மட்டுமே இது எவ்வளவு தீவிரமானது என்பதை பொதுமக்கள் புரிந்து கொள்வார்கள். இது குறித்து தொடர்ந்தும் நாம் எச்சரிக்கை விடுத்து வருகிறோம்.

தற்போதே காலம் கடந்து விட்டது. எனவே விளைவுகளை நாங்கள் சந்தித்து அதை சமாளிக்க வேண்டும்.

பி.சி.ஆர் சோதனைகள் திறம்பட மேற்கொள்ளப்பட்டால், முடிவுகள் மே மாதத்திலிருந்து தொற்றுநோய்களின் அதிகரிப்பைக் கண்டு கொள்ள முடியும் என கூறியுள்ளார்.

இதற்கிடையில் தடுப்பூசிகள் 100 சதவீதம் பாதுகாப்பானவை என்று மக்கள் கருதுகிறார்கள் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.