மூன்றாம் உலகப்போரின் பாகமா???? covid 19

0

உலகம் இதுவரை கண்டிராத மாற்று ஒழுங்கில் இன்று பயணித்துக் கொண்டிருக்கின்றது. புராணக்கதைகளிலும், சினிமாக்களிலும் பேசிக் கொண்டதைப் போன்று கற்பனையோடு மாத்திரம் நின்றிருந்த மனிதகுலம் அதே நிகழ்வுகளை ஒத்ததாக இன்று அனுபவிக்க தொடங்கி இருக்கின்றது.

அதுதான் covid 19 என்ற கொரோனா வைரஸ்தாக்கம். சீனாவின் வூகான் நகரில் முதன்முதலாக அறியப்பட்டதாக சொல்லப்பட்டாலும் இதன் உண்மைத்தன்மை இன்றும் அறிய முடியாமல்தான் இருக்கின்றது.

பல கோணங்களால் ஆய்வாளர்களால் ஆராயப்பட்டாலும், இது இயற்கையாக இருந்தாலும் செயற்கையாக இருந்தாலும் இது உலகிற்கு அல்லது உலக வல்லரசாகத் துடிக்கும் சில முதலாளித்துவ நாடுகளுக்கு ஒரு பாதையை காட்டி நிற்கின்றது என்பதுதான் உண்மை.

இந்த நிலைமை உலக ஒழுங்கில் அச்சுறுத்தலாக அமையுமா? இல்லையா? என்பதனை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இதுவரை உலகளவில் 18லட்சத்திற்கும் மேற்பட்டோர தொற்றுக்குள்ளாகி 412,534 மேற்பட்டோர் குணமாகினாலும், 114,000 பேருக்கு மேல் இந்த உலகு பலி கொடுத்து இருக்கின்றது.

மருத்துவ உலகின் உச்சம் என்று இப்போது பேசிக் கொண்டாலும் தோல்வியை ஏற்றுக் கொள்ள வேண்டிய நிலையில் உலகு இன்று இருக்கின்றது. உதாரணமாக இதுபோன்ற தொற்றுக்கள் நிகழ்கின்ற பொழுது ஆசியா குறிப்பாக தெற்காசியா போன்ற சிறிய வறுமையான நாடுகள் தான் இலகுவில் பாதிக்கப்படுவதும் அதில் இருந்து மீளமுடியாமல் அவதிப்படுவதும் வழமை. செல்வந்த நாடுகள் தமது பணபலம், தொழிநுட்ப, மருத்துவ மேன்மையால் இலகுவாக தப்பித்துக் கொள்ளும்.

ஆனால் இன்று உலக வல்லரசே (அமெரிக்கா) திணறுகின்ற நிலையில் குறிப்பாக உலக அளவில் கொரோனா covid 19 இழப்பு மரணவீதத்தில் அமேரிக்கா இதுவரையில் 20,000க்கும் மேற்பட்டோரை இழந்து முன்னிலையில் இருப்பதானது உலக வல்லரசு படுதோல்வியடைந்து இருப்பதை காட்டுகின்றது.

இதன்பின் ஸ்பெயின், இத்தாலி பிரான்ஸ், ஐரோப்பா என நீண்டு செல்கின்றது. இந்த நிலைமை உலகம் எதை நோக்கிச் செல்கின்றது என எண்ணத் தோன்றுகின்றது.

இது எல்லாம் வைத்துத்தான் இந்த வைரஸ் தொற்று உலகில் (உயிரியல்) உயிர்தாக்குதல் இடம்பெறுவதற்கான முன்னோட்டமாக இருக்கலாம் என ஐ.நா பாதுகாப்புச்சபைக் கூட்டத்தில் அதன்

செயலாளர் ஆண்டனியோ குட்டரெய்ஸ் கூறி இருக்கின்றார். இந்த கருத்தைத்தான் நாம் சொல்கின்றோம். இது மூன்றாம் உலகப் போரின் வெள்ளோட்டமா? அல்லது இந்த கொரோனா மூன்றாம் உலகப்போரை முன்னெடுக்க ஒரு புதிய உத்தியாக அமையுமா? முன்பு கூறியது போல இது இயற்கையாக உருவாக்கப்பட்டு இருந்தாலும் அல்லது செயற்கையாக நடைபெற்று இருந்தாலும் இது நிச்சயமாக (ஒரு பாதையை) உலக ஒழுங்கை மாற்றி இருக்கின்றது. உலக வல்லரசு கனவில் இருப்பவர்களுக்கு இது ஒரு மூலதனமே.

காரணம் சத்தமில்லை, இரத்தமில்லை, பிணக்குவியல்களுக்குள் நின்று இயந்திரங்களுடன் போராடவில்லை. அணு ஆயுத யுகம் கடந்து இன்று உயிரியல் ஆயுதங்கள் அதன் பாவணை என்கின்ற உலகிற்கு செல்கின்றோம் என்ற பயங்கரம் பலருக்குள் இன்று எழுந்திருக்கின்றது. குறிப்பாக அமெரிக்கா அதை உணர்ந்து இருக்கின்றது.

ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் பல ஆய்வுகளை செய்யத்துவங்கி இருக்கின்றது. அதில் ஒன்று குறிப்பாக 73 கொரோனா தொற்றுக்குள்ளான நாடுகளில் இருந்து பெறப்பட்ட தரவுகள் மூலம் covid 19 தொடர்பான மூலங்கள் ஆராயப்படுகின்றது. இந்த ஆய்வுகளின் மூலம் குறித்த பல்கலைக்கழகம் பல விடயங்கள் வெளிக்கொண்டு வந்து கொண்டு இருக்கின்றார்கள்.

குறிப்பாக ஒரு இடத்தில் ஆரம்பித்து மிகமிக குறுகிய நாட்கள் அல்லது மாதங்களில் உலகில் இருக்கின்ற 203 நாடுகளுக்கு மேல் கொரோனா covid 19 தொற்று ஏற்பட்டு பீதியில் இருக்கின்றது.

உலகையே இன்று ஆட்டிப்படைகின்ற ஒரு சர்வதேச அரக்கனாக பார்க்கப்படுகின்றது. இதை ‘அண்டனியோ குட்டரெய்ஸ்’ கூறியது போன்று உயிரியல் தாக்குதலாக இருக்குமானால் இதன் சூத்திரதாரி இந்த உலகிற்கு ஒரு செய்தியை நிச்சயமாக சொல்லித்தான் இருக்கின்றான் என்று பார்க்க முடிகின்றது.

எதுவும் கடந்து போகும் என்ற மனநிலை உலக வழமையில் உண்மை. ஆனால் கடந்து போனாலும் கழன்று போகாது என்பது தான் உண்மை நிலவரம்.

இதெல்லாhம் இருக்க மறுபுறம் இந்த உலகு தனது பழைய நாகரீக முறைமைதான் நடைமுறை வாழ்க்கைக்கும், மனித மேன்மைக்கும் உகந்தது என்ற எண்ணக்கருவை உருவாக்கி இருக்கின்றது என்ற உண்மையை மறுப்பதற்கில்லை.

இந்த நோய் தொற்று காரணமாக உலகில் பெரும்பாலான நாடுகளில் ஊரடங்கு நிலை, வீட்டில் முடங்கி இருக்க வேண்டிய நிலையில் உலகம் தள்ளப்பட்டு இருக்கின்றது. இப்படி நிலைகள் ஏற்பட்டால் ஒருநாள், இரண்டு நாள் அல்லது ஒருவாரங்கள் தாக்குப்பிடிக்கலாம்.

கையிருப்பில் இருக்கின்ற உணவுகள், அத்தியாவசிய பொருட்கள் முடிவடைந்தால் மனிதன் என்ன செய்வது? இங்கு மீள் பாதைக்கு செல்ல மனிதன் ஆரம்பித்து இருக்கின்றான். வேகமாக ஓடிய மனித வாழ்வு திசை திரும்பி பயணிக்க ஆரம்பித்து இருக்கின்றது.

தனக்கானதை தானே உற்பத்தி செய்தல், கிராமப்புறங்களை நாடுதல், வீட்டுத்தோட்டம் உணவு, உற்பத்தி என ஆரம்பித்து பழமையை நினைக்க வைத்திருக்கின்றது.

இது நிலைக்கும் என்பது கேள்விக்குறி நிலைத்தால் நன்று. இருந்தாலும் covid 19 இனை கட்டுப்படுத்துவதற்கு பல நாடுகள் முயற்சிக்கின்றன. அதில் இந்தியா உலகளவில் முண்ணனியாக இருக்கின்றது.

ஆகஸ்போர்ட் பல்கலைக்கழகம் கொரோனா covid 19 தொற்று ஏற்பட்ட 73 முண்ணனி நாடுகளை எடுத்து மேற்கொண்ட ஆய்வில் முழஎனை 19 இனை கட்டுப்படுத்துவதற்கு கையாண்டமுறைமைகளுக்காக அதனை தனது நாட்டில் வேகமாக பரப்புவதை குறைத்ததுக்காக 100% புள்ளிகளை வழங்கி (ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம்) உலகளவில் முதல் இடத்தில் இருக்கின்றது இந்த covid 19 பரவுதை குறைப்பதில்.

இவ்வாறு கடந்த காலங்களில் பலவகையில் சிந்தித்து ஒவ்வொரு நாடும் ஒவ்வொரு விதமாக புதுமைகளை படைத்துக் கொண்டு இருந்த பொழுது யாருக்கும் தெரியாமல் உலகில் ஒரு அசரீதி எழுப்பப்பட்டு இன்று covid 19 கொரோனா என்கின்ற ஒன்றைப்பற்றி மாத்திரம் அதை முறியடிப்பதை அல்லது அதை வெற்றி கொள்வது என்பது தொடர்பாக இந்த உலக பார்வையை ஒருபுள்ளியில் கொண்டு வந்து நிறுத்தி இருக்கின்றது. இது உண்மையிலேயே செயற்கையானதாக இருந்தால் இதன் பாரதூரமானதான விளைவுகளை இந்த உலகம் சந்தித்தே ஆக வேண்டும்.

எனவே இது covid 19 இதுவரையில் இலங்கையில் 210 தொற்றுள்ள நோயாளர்களாகவும், 147 பேர் சிகிச்சை பெறும் நோயாளர்களாகவும், 154 பேர் சந்தேகத்திற்கிடமாக வைத்தியசாலைக் கண்காணிப்பிலும், 56 பேர் குணமடைந்து வெளியேறியும், 07 நபர்கள் இதுவரையில் மரணமடைந்தும் இருக்கின்றார்கள் (இலங்கை இழந்திருக்கின்றது). எனவே முழஎனை 19 இலங்கையில் எப்படி இதை எவ்வாறு கட்டுப்படுத்துகின்றது. இதன் மூலம் ஆளும் அரசுகள் தங்களை எவ்வாறு தயார் செய்கின்றார்கள்.

மனிதாபிமான பணிகள் தொடர்பாக அடுத்த பந்தியில் சந்திப்போம். …………….

‘இனியவன்’