மூன்றாவது அலையில் மட்டக்களப்பில் 239 கொரோனா தொற்றாளர்கள் – நால்வர் உயிரிழப்பு

0

மட்டக்களப்பு பிராந்தியத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 35 கொரோனா  தொற்றாளர்கள்  அடையாளம் காணப்பட்டுள்ளதாக பிராந்திய சுகாதார பணிப்பாளர் நாகலிங்கம் மயூரன் தெரிவித்துள்ளார்.

இவர்களில் மட்டக்களப்பு சுகாதார பிரிவைச் சேர்ந்த 15 பேரும் களுவாஞ்சிகுடி சுகாதார வைத்திய பரிசோதனை பிரிவிற்குட்பட்ட பகுதியில் ஐந்து பேரும் ஓட்டமாவடி வெல்லாவெளி ஏறவூர் சுகாதார பிரிவுக்குட்பட்ட பகுதியில் தலா மூன்று பேரும் செங்கலடி சுகாதார பிரிவில் இரண்டு நபர்களும் கிரான் சுகாதார பிரிவுக்குட்பட்ட பகுதியில் ஒருவருமாக மொத்தமாக 35 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதுவரையில் மொத்தமாக மட்டக்களப்பு பகுதியில் 1222 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன்  இவர்களில் 992 பேர் குணமடைந்து வீடு சென்றுள்ளனர். இதுவரையில் 13 பேர் உயிரிழந்துள்ளனர்.

மூன்றாவது அலையில் இதுவரையில் மட்டக்களப்பு பகுதியில்  239 கொரோனா தொற்றாளர்கள்  அடையாளம் காணப்பட்டுள்ளதுடன்  நால்வர் உயிரிழந்துள்ளனர்.