மூன்று மாத குழந்தை உட்பட மூன்று பேர் ஐ.டி.எச். வைத்தியசாலைக்கு மாற்றம்!

0

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளனதாக சந்தேகிக்கப்படும் மூன்று மாத குழந்தை உட்பட மூன்று பேர் சிலாபம் பொது வைத்தியலையில் இருந்து அங்கொடை ஐ.டி.எச். வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

இன்று (திங்கட்கிழமை) மட்டும் கொரோனா வைரஸ் தாக்கத்தினால் பாதிக்கப்பட்ட தொற்றாளர்கள் 3 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் மொத்த எண்ணிக்கை 120 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா தொற்றுக்குள்ளான சந்தேகத்தில் 117 பேர் நாடு முழுவதிலும் உள்ள வைத்தியசாலையில் தொடர்ந்தும் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் சுகாதார மேம்பாட்டு பணியகம் அறிவித்துள்ளது.