மூன்று மாவட்டங்களில் பிடிக்கப்படும் மீன்களை கொள்வனவு செய்வதற்கு தீர்மானம்!

0

மூன்று மாவட்டங்களில் பிடிக்கப்படும் மீன்களை கொள்வனவு செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

நிதி அமைச்சின் செயலாளர் S.R.ஆட்டிகல இதனைத் தெரிவித்துள்ளார்.

ஹம்பாந்தோட்டை, புத்தளம் மற்றும் மாத்தறை மாவட்டங்களில் பிடிக்கப்படும் மீன்களை கொள்வனவு செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு தேவையான நிதி, மாவட்ட செயலாளர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

மூன்று மாவட்டங்களுக்கும் தலா 20 மில்லியன் ரூபாய் வழங்கப்படவுள்ளதாக நிதி அமைச்சின் செயலாளர் S.R. ஆட்டிகல குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், மாவட்ட செயலாளர்களால் கொள்வனவு செய்யப்படும் மீன்களை ஏனைய மாவட்டங்களுக்கு விநியோகிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.