மேலதிக பயணிகள் இருந்தால் சிக்கல்

0

நாட்டின் பல்வேறு பிரதேசங்களிலும் சேவைகளில் ஈடுபடும் பஸ்களில், ஆசனங்களின் எண்ணிக்கைகளுக்கு மேலதிகமாக பயணிகளை ஏற்றுவதாக முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் ஆராய நடமாடும் விசாரணை அதிகாரிகளை ஈடுபடுத்தியுள்ளதாக, தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் ஜெனரல் நிலான் மிரென்டா தெரிவித்துள்ளார்.

இதேவேளை தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறி, சேவையில் ஈடுபட்ட பஸ் ஒன்று, பாணந்துறை பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், பஸ்ஸின் சாரதி மற்றும் நடத்துனரும் கைதுசெய்யப்பட்டுள்ளனரென பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.