மேலதிக வகுப்புக்களை நடத்துவதற்கு நடவடிக்கை?

0

மேலதிக வகுப்புக்களை நடத்துவதற்கு தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு  நிதி அமைச்சர் அறிவித்துள்ளார்.

நிதி அமைச்சர் தலைமையில் நேற்று ( சனிக்கிழமை)  அலரிமாளிகையில் நடைபெற்ற  நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலருடனான கலந்துரையாடலில் மேலதிக வகுப்புக்களை நடத்தும் ஆசிரியர்கள் சிலரும் கலந்துகொண்ட போதே நிதி அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தொழில் சார் விரிவுரையாளர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் இதுதொடர்பாக தெரிவிக்கையில், வரவு செலவு திட்டம் தொடர்பாக கலந்துரையாடுவதற்காக ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுடன் தொடர்புபட்ட இணை சங்கங்களின் பிரதிநிதிகளை நிதி அமைச்சர் அலரிமாளிகைக்கு அழைத்திருந்தார்.

இதன்போது ஒன்றை வருடகாலமாக மூடப்பட்டிருக்கும் மேலதிக வகுப்பு செயற்பாடுகளை, பாடசாலைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படும்போது ஆரம்பிக்க உதவுமாறு கேட்டுக்கொண்டோம். அதற்கமைவாக மேலதிக வகுப்புகளை எதிர்வரும் முதலாம் திகதியிலிருந்து நடத்துவதற்கு தேவையான ஒழுங்குகளை மேற்கொள்ளுமாறு நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ அறிவித்தார்.

இதற்காக கொவிட் தொற்று பரவலை தடுக்கும் செயலணியுடன் தொடர்புகொண்டு சுகாதார வழிகாட்டி ஆலோசனைகளுக்கு ஏற்பாடு செய்துக்கொள்ளுமாறும் அறிவித்தார் என்று தெரிவித்தார்.