நாட்டில் மேலும் இரண்டு பகுதிகள் உடன் அமுலாகும் வகையில் தனிமைப்படுத்தபட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
தற்போதுள்ள கோவிட் -19 தொற்றுநோயைக் கருத்தில் கொண்டு இந்த முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி மேலும் தெரிவித்தார்.
இதன்படி, நுவரெலியா மாவட்டத்தின் கொத்மலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பனங்கம்மன கிராம சேவகர் பிரிவு தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் திருகோணமலை மாவட்டத்தின் திருகோணமலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுபத்ராலங்கா மாவத்தை கிராம சேவகர் பிரிவு தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.
இதேவேளை, தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய மேலும் 238 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன இதனைத் தெரிவித்துள்ளார்.
இதனிடையே நேற்றைய தினம் 1939 பேருக்கு கோவிட் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. நாட்டில் ஒரே நாளில் பதிவான அதிகூடிய கோவிட் தொற்றாளர் எண்ணிக்கை இதுவாகும்.
இதன்படி இலங்கையில் கோவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 117,529 ஆக உயர்ந்துள்ளது.
100,075 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் 734 பேர் உயிரிழந்துள்ளனர். 16,734 பேர் தற்போது சிகிச்சைப் பெற்றவருவதாக தொற்றுநோயியல் பிரிவு அறிவித்துள்ளது.