மேலும் இரண்டு பொலிஸ் அதிகாரிகளுக்கு கொரோனா

0

மேல் மாகாண விசேட விசாரணைப் பிரிவின் மேலும் இரண்டு பொலிஸ் அதிகாரிகளுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 

அவர்கள் கேகாலை மற்றும் களனி பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என கோட்டை பொலிசார் தெரிவித்துள்ளனர். 

தொற்றாளராக நேற்றைய தினம் இனங்காணப்பட்ட பொலிஸ் பரிசோதகருடன் நெருங்கிப் பழகிய இருவருக்கே இவ்வாறு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 

கொழும்பு – கோட்டை பொலிஸ் நிலையத்தில் அமைந்துள்ள மேல் மாகாண விசேட விசாரணை பிரிவின் பொலிஸ் பரிசோதகருக்கு கொவிட் 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், அவருடன் நெருங்கிப் பழகிய 11 பேர் தனிமைப்படுத்த பட்டனர். 

குறித்த கட்டிடத்தில் அமைந்துள்ள கோட்டை பொலிஸ் நிலைய அதிகாரிகள் தனிமைப்படுத்தப்பட்டதினால் சில மணித்தியாலங்களுக்கு கோட்டை பொலிஸ் நிலையம் தற்காலிகமாக மூடப்பட்ட நிலையில் கிருமித்தொற்று நீக்கப்பட்ட பின்னர் குறித்த பொலிஸ் நிலையம் நாளாந்த நடவடிக்கைகளுக்காக மீண்டும் திறக்கப்பட்டமை குறிப்பிடதக்கது.