மேலும் ஒருவருக்கு கொரோனா: தொற்று கண்டறியப்பட்ட 27 பேரில் 24 பேர் கடற்படையினர்!

0

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் மேலும் ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளமை அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

நேற்று மட்டும் 26 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்தது.

இதற்கமைய இலங்கையில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 824 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, கடந்த 24 மணித்தியாலத்தில் தொற்று கண்டறியப்பட்ட 27 பேரில் 24 பேர் கடற்படையினர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கடற்படையினருடன் நெருக்கமாக இருந்த 2 பேருக்கும் நேற்று தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அதில் கடற்படை தம்பதி ஒன்றின் 13 மாதங்களேயான குழந்தைக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

அத்துடன், டுபாயில் இருந்து நேற்று காலை அழைத்துவரப்பட்ட ஒருவரும் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இதனிடையே, தொற்றுக்குள்ளான 824 பேரில் 232 பேர் குணமடைந்துள்ள நிலையில் 583 பேர் சிகிச்சைபெற்று வருகின்றனர். இலங்கையில் இதுவரை கொரோனா தொற்றுக்கு 9 மரணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.