அரசாங்கத்திற்கு வழங்கிய ஆதரவை மீளப்பெற்றுக்கொண்டு நாடாளுமன்றில் சுயாதீனமாக செயற்படுவதற்கு தீர்மானித்திருந்த குழுவிலிருந்து சிலர் மீண்டும் அமைச்சுப் பொறுப்பை ஏற்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
புதிய அமைச்சரவை நியமிப்பின் போதோ அல்லது அதற்கு முன்னதாகவோ குறித்த தரப்பினர் பதவிப்பிரமாணம் செய்யவுள்ளதாக அறியமுடிகிறது.
தற்போது வரையில் இது தொடர்பான கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
நாடாளுமன்றில் உள்ள 41 எம்.பிக்கள் சமீபத்தில் சுயாதீனமாக செயற்படுவதற்கு தீர்மானித்திருந்தனர்.
எவ்வாறாயினும், நேற்றைய தினம் சுயாதீனமாக செயற்படுவதாக அறிவித்திருந்த ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஷாந்த பண்டார புதிய இராஜாங்க அமைச்சுப் பொறுப்பொன்றை பெற்றுக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.