இலங்கையில் மேலும் 3 பேர் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அதன் அடிப்படையில் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 960 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று உறுதியான 957 பேர் ஏற்கனவே அடையாளம் காணப்பட்டிருந்த நிலையில், தற்போது மேலும் 03 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அத்துடன், இறுதியாக அடையாளம் காணப்பட்ட 25 பேரில் 23 பேர் கடற்டையினர் என இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். ஏனைய இருவரும் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், இதுவரையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களில் 520 பேர் பூரண குணம் அடைந்துள்ளனர் என்பதுடன், 9 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.