மேலும் 10 பேருக்கு வைரஸ் தொற்று- மொத்தமும் கடற்படையினர்!

0

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 10 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 567 ஆக அதிகரித்துள்ளது.

இன்று மதியம் வந்த தகவலின் படி 34 கடற்படையினருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது மேலும் 10 பேருக்கு தொற்று கண்டறியப்பட்ட நிலையில் இன்று இதுவரை மட்டும் 44 பேர் பாதிக்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

இதேவேளை, இன்று 6 பேர் குணமடைந்துள்ள நிலையில் மொத்தமாக 126 பேர் குணமடைந்து வீடுகளுக்குத் திரும்பியுள்ளதுடன் 7 பேரின் மரணங்கள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.