மேலும் 6 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டன

0

நான்கு மாவட்டங்களின் 06 கிராம சேவகர் பிரிவுகள் உடன் அமுலாகும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்தார்.

அந்தவகையில்,

புத்தளம் மாவட்டத்தின் மெத கிரிமட்டியான பகுதி தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

மாத்தறை மாவட்டத்தின் உயன்வத்த, உயன்வத்த வடக்கு கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

மாத்தளை மாவட்டத்தின் உடஹப்புவிட்ட கிராம உத்தியோகத்தர் பிரிவு முடக்கப்பட்டுள்ளது.

கண்டி மாவட்டத்தின் வல்கம்பாய கிராம சேவகர் பிரிவின் திப்புட்ட கிராமம் மற்றும் கொஸ்கஸ்தன்ன ஆகிய பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

இதனிடையே, குருநாகல் மாவட்டத்தின் நிகதலுபொத்த கிராம உத்தியோகத்தர் பிரிவு தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி தெரிவித்தார்.