மேலும் 8 பேருக்கு கொரோனா வைரஸ்..!

0

இலங்கையில் மேலும் 8 பேர்  கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன் அடிப்படையில் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 460 ஆக  அதிகரித்துள்ளது.

நேற்றுமட்டும் அடையாளம் காணப்பட்டவர்களில் 20 பேர் கடற்படை வீரர்கள், 04 பேர் கடற்படை மாலுமிகளின் உறவினர்கள் என்றும் 16 பேர் தனிமைப்படுத்தப்பட்ட மையங்களிலிருந்தவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி இதுவரை கொழும்பு பண்டாரநாயக்க மவத்தையிலிருந்து இதுவரை 98 கோவிட் -19 நோயாளிகளும் கடற்படை முகாமில் 85 பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதுவரையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களில் 118 பேர் பூரணகுணம் அடைந்துள்ளதுடன் ஏழு பேர்  உயிரிழந்துள்ளனர்.