மேலும் 87 பேருக்கு கொரோனா

0

மேலும் 87 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

குறித்த அனைவரும் கந்தகாடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் உள்ளவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

அதனடிப்படையில் இன்றை தினத்தில் மாத்திரம் இதுவரையில் 283 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளமை இனங்காணப்பட்டுள்ளனர்.

இதுவரை கந்தகாடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் 339 கொரோனா நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும், பி.சி.ஆர் பரிசோதனை தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், கந்தகாடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் கொரோனா நோயாளர்கள் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக சுகாதார சேவைப் பணிப்பாளர் நாயகம் வைத்திய அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

இன்று கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட 283 தொற்றாளர்களை தொடர்ந்து நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின எண்ணிக்கை 2437 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களில் இதுவரை 1980 பேர் பூரணமாக குணமடைந்து வீடுகளுக்கு சென்றுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

தற்போது, 446 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வரும் நிலையில் இதுவரை 11 கொரோனா நோயாளர்கள் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.