மேல் மாகாணத்திலுள்ள வெளிமாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் விசேட அனுமதியைப் பெறாமல் வெளியேற முடியாது!

0

மேல் மாகாணத்திலுள்ள வெளிமாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் விசேட அனுமதியைப் பெறாமல் தமது மாவட்டங்களுக்குச் செல்ல அனுமதிக்கப்படமாட்டார்கள் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

கொழும்பு, கம்பஹா மாவட்டங்களில் நாளை(செவ்வாய்கிழமை) காலை ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படவுள்ள நிலையிலேயே இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

ஏனைய மாகாணங்களில் மாவட்டங்களுக்கு இடையிலான போக்குவரத்துக்கு அனுமதி வழங்கப்படுகின்ற போதிலும், மேல் மாகாணத்திற்கு வருவதற்கோ அல்லது மேல் மாகாணத்திலிருந்து வெளியே செல்வதற்கோ அனுமதி பெறப்பட வேண்டும் எனவும் குறிப்பிடப்படுகின்றது.