மேல் மாகாணத்தில் இருந்து வௌிமாவட்டங்களுக்கு பயணித்த 451 பேரில் 5 பேருக்கு கொரோனா

0

மேல் மாகாணத்தில் இருந்து வௌிமாவட்டங்களுக்கு பயணித்த 451 பேரில் 5 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

எழுமாற்றாக மேற்கொள்ளப்பட்ட ரேபிட் ஆன்டிஜென் பரிசோதனையில் அவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேல் மாகாணத்தில் இருந்து வௌியேறுபவர்களை எழுமாற்றாக ரேபிட் ஆன்டிஜென் பரிசோதனைக்கு உட்படுத்தும் நடவடிக்கை இன்று காலை முதல் ஆரம்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.