மேல் மாகாணத்தில் உள்ள பாடசாலைகளை 15 ஆம் திகதி திறக்க நடவடிக்கை!

0

மேல் மாகாணத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளையும் மீண்டும் திறப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து அதிகாரிகள் ஆராய்ந்து வருவதாக கல்வி அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

தற்போது க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்காக மட்டுமே மேல் மாகாணத்தில் உள்ள பாடசாலைகள் திறக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 15 ஆம் திகதிக்கு முன்னர் முழுமையாக திறப்பது குறித்து கலந்துரையாடப்படுவதாக கல்வி அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் குறிப்பிட்டார்.

அத்தோடு, கொரோனா தடுப்பூசி வழங்குவதில் ஆசிரியர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்றும் கல்வி அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.