மேல் மாகாணத்தில் பாடசாலைகளை மீண்டும் திறக்க நடவடிக்கை?

0

மேல் மாகாணத்தில் பாடசாலைகள் திறப்பது தொடர்பில் இன்று விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது.

கல்வி அமைச்சின் அதிகாரிகள் மற்றும் சுகாதார பிரிவுகளுக்கு இடையில் இன்று விசேட கலந்துரையாடல் நடத்தப்படவுள்ளது.

இது தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தலைமையில் அண்மையில் இடம்பெற்ற ஜனாதிபதி செயலணி கூட்டத்திலும் மேல் மாகாணத்தில் பாடசாலைகள் திறப்பது தொடர்பான கலந்துரையாடல் இடம்பெற்றது.

மேல் மாகாணத்தில் மாகாண ரீதியாக, மாவட்ட ரீதியாக அல்லது பாடசாலை ரீதியாக பாடசாலைகளை திறப்பதா இல்லையா என கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இன்றைய தினம் இடம்பெறவுள்ள விசேட கலந்துரையாடலின் பின்னர் இறுதி முடிவு அறிவிக்கப்படவுள்ளது.