மேல் மாகாண கொவிட் அச்சுறுத்தல் : பரிசோதனை நடத்தும் 12 இடங்களின் பெயர்கள் வெளியானது (நகரங்களின் பெயர்கள் இணைப்பு)

0

மாகாணங்கள் மற்றும் மாவட்டங்களுக்கு இடையில் கொரோனா தொற்று பரவுவதை கட்டுப்படுத்தும் நோக்கில் மேல் மாகாணத்தில் இன்று (29) மதியம் 12 மணி முதல் விசேட சோதனைகள் நடத்தப்படவுள்ளன.

மேல் மாகாணத்திற்குள் பிரவேசிக்கும் மற்றும் வெளியேறும் 12 இடங்களில் கொவிட் பரிசோதனைகள் நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பொலிஸார், முப்படையினர் மற்றும் சுகாதார பிரிவினர் இணைந்து, இந்த பரிசோதனைகளை நடத்தவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொஸில் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவிக்கின்றார்.

தெரிவு செய்யப்பட்ட 12 இடங்களில் இந்த பரிசோதனைகள் நடத்தப்படவுள்ளதாகவும் அவர் கூறினார்.

இந்த இடங்களில் எழுமாறாக தெரிவு செய்யப்படுவோருக்கு ரெபிட் அன்டீஜன் பரிசோதனை நடத்தப்படவுள்ளது.

சோதனை நடத்தப்படும் இடங்கள்

  1. கொச்சிக்கடை தொப்பு பாலம்
  2. கொட்டதெனியாவ படல்கம பாலம்
  3. நிட்டம்புவ ஹெலகல சந்தி
  4. மீரிகம கிரிவுல்ல பாலம்
  5. தொம்பே சமனபெத்த பாலம்
  6. ஹங்வெல்ல வனஹாகொட பாலம்
  7. அளுத்கம பெந்தர பாலம்
  8. திதியாவல சந்தி
  9. இங்கிரிய கெட்டகெதெல்ல பாலம்
  10. பதுரெலிய − கலவானை சமன் தேவாலயம் அருகில்
  11. மீகஹதென்ன − கொரகந்துவ அவித்தாவ பாலம்
  12. தெற்கு அதிவேக வீதியின் வெலிபெத்த இடமாறும் இடம்