மாகாண சபை தேர்தலில் மேல் மாகாணத்தில் தனது கட்சியினை களமிறக்குவதற்குரிய நடவடிக்கையினை கருணா அம்மான் முன்னெடுத்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் செங்கலடி பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே கருணா அம்மான் இதுகுறித்த தகவலினை வெளியிட்டுள்ளார்.
தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவராக கருணா அம்மான் செயற்பட்டு வரும் நிலையிலேயே இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்.
தற்போது ஆட்சியுள்ள கோட்டாபய மற்றும் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோருக்கு கருணா அம்மான் மிகவும் நெருக்கமானவர் என்பதுக் குறிப்பிடத்தக்கது.