மே 10 இற்கு முன்னர் ஓய்வூதியம் உள்ளிட்ட ஏனைய கொடுப்பனவுகளும் வழங்கப்படும் என அறிவிப்பு!

0

எதிர்வரும் மே மாதம் 10 ஆம் திகதிக்கு முன்னர் ஓய்வூதியம் உள்ளிட்ட ஏனைய கொடுப்பனவுகளும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நிதியமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இற்கமைய அங்கவீனக் கொடுப்பனவும், சிறு நீரக நோயாளிகளின் கொடுப்பனவு, சமுர்த்தி கொடுப்பனவு, முதியோர்களுக்கான கொடுப்பனவு உள்ளிட்டவற்றை உரிய திகதிக்குள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இதற்கு தேவைாயன நிதியும் திறைசேரியில் உள்ளதாக நிதியமைச்சின் செயலாளர் எஸ்.ஆர்.ஆர்டிகல சுட்டிக்காட்டியுள்ளார்.