மைத்திரியின் குடியுரிமையை 7 ஆண்டுகளுக்கு இரத்து செய்ய பரிந்துரை

0

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் குடியுரிமையை 7 ஆண்டுகளுக்கு இரத்துச் செய்ய பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் தொடர்பான விசாரணைகளை நடத்திய ஜனாதிபதி ஆணைக்குழு இந்த பரிந்துரையை முன்வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த ஜனாதிபதி ஆணைக்குக்குழுவை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே நியமித்தார்.

விசாரணைகளை நடத்திய ஆணைக்குழு கடந்த முதலாம் திகதி தனது அறிக்கை மற்றும் பரிந்துரைகளை தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் கையளித்தது.