மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 1,162 ஆக அதிகரிப்பு

0

கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியவர்களின் மொத்த எண்ணிக்கை 1,162 ஆக அதிகரித்துள்ளது என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இன்றுமட்டும் மேலும் 14 பேர் அடையாளம் காணப்பட்டதை அடுத்து இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது என அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை ஏற்கனவே குவைத்தில் இருந்து நாடுதிரும்பிய மேலும் 07 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகிய நிலையில் இன்றுமட்டும் 21 பேர் நோயாளிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் கொரோனா தொற்று தொற்று உறுதிப்படுத்தப்பட்ட 458 பேர் வைத்தியசாலைகளில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர். 10 மரணங்கள் கொரோனா வைரஸினால் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.