மோட்டார் வாகன தண்டப்பணம் செலுத்துவதற்காக சலுகை காலம்

0

மோட்டார் வாகன தண்டப்பணம் செலுத்துவதற்காக சலுகை காலம் வழங்கப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

அதனடிப்படையில் ஜூன் மாதம் 30 ஆம் திகதி வரையில் இவ்வாறு சலுகை காலம் வழஙக்ப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

இலங்கை பொலிஸாரினால் 2020 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 16 ஆம் திகதி அல்லது அதற்கு பின்னர் விதிக்கப்பட்ட தண்டப் பணம் விதிக்கப்பட்டிருந்த போதிலும் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக செலுத்த முடியாமல் இருந்த தண்டப் பணத்தை ஜூன் மாதம் 30 ஆம் திகதிக்கு முன்னர் செலுத்துமாறு தபால்மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன தெரிவித்துள்ளார். 

அதனப்படையில் பெப்ரவரி மாதம் 16 ஆம் திகதி முதல் விதிக்கப்பட்ட தண்டப் பணத்தை மேலதிக தண்டப் பணத்துடன் மக்களுக்கு செலுத்த முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். 

நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து தபால் நிலையங்களில் அல்லது உப தபால் நிலையங்களில் குறித்த தண்டப் பணத்தை செலுத்த முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.