யாழில் இன்று மேலும் இருவருக்கு கொரோனா

0

யாழ்ப்பாணம் பலாலிப் பகுதியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் மருத்துவர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தனது முகப்புத்தகத்தில் பதிவிட்டுள்ள அவர்,

யாழ்ப்பாணத்தில் இன்று (ஏப்ரல் 15) புதன்கிழமை 23 பேருக்கு கோரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சந்தேகத்தின் அடிப்படையில் சேர்க்கப்பட்ட 4 பேர் பலாலி தனிமை படுத்தப்பட்ட நிலையத்தில் உள்ள 3 பேர், யாழ்ப்பாணம் மாநகர சுகாதார வைத்திய அதிகாரி பிரிவைச் சேர்ந்த 7 பேர் நல்லூர் நல்லூர் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவைச் சேர்ந்த 2 மற்றும் முழங்காலில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையத்தில் உள்ள 2 பேருக்கு பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டன.

இதில் பலாலிப் பகுதியில் தனிமைப்படுத்தப்பட்டு இருக்கும் 2 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது“ எனத் தெரிவித்துள்ளார்.