யாழில் இருவர் படுகொலை: 12 பேர் கைது

0

யாழ்ப்பாணத்தில், இரு குடும்பங்களுக்கு இடையில் ஏற்பட்ட முரண்பாடு மோதலாக உருவெடுத்ததில் இருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

சுழிபுரம் மத்தி குடாக்கனை பகுதியிலிலேயே இந்த மோதல் இடம்பெற்றுள்ளது. இதில், அப்பகுதியைச் சேர்ந்த  சின்னவன் செல்வம் (வயது-56) மற்றும் இராசன் தேவராசா (வயது-31) ஆகிய இருவரும் உயிரிழந்துள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

இரு குடும்பங்களுக்கு இடையில் நீண்ட காலமாக நிலவி வந்த முரண்பாடு, கடந்த வௌ்ளிக்கிழமையும் ஏற்பட்டுள்ளது. மாலை இரு குடும்பங்களுக்கும் இடையில் கடும் வாய் தர்க்கம் ஏற்பட்டு , கைக்கலப்பாக மாறும் சூழ் காணப்பட்ட போது அயலவர்களால் இரு தரப்பினரும் சமாதானப்படுத்தப்பட்டனர்,

பின்னர் பின்னிரவு நேரம் ஒரு தரப்பினர் மற்றைய தரப்பினரின் வீட்டினுள் அத்துமீறி நுழைந்து வீட்டிலிருந்தவர்கள் மீது கூரிய ஆயுதங்களால் தாக்கியுள்ளனர்.

அதில்  சின்னவன் செல்வம் சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளார், மற்றையவரான இராசன் தேவராசா (வயது-31) சிகிச்சைக்காக வைத்திய சாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்த பொலிஸார், சந்தேகத்தின் பேரில் 12 பேரை கைது செய்துள்ளதாகவும் தெரிவித்தனர்.