யாழில் ஊரடங்குச் சட்டத்தினை அகற்றுவது சாத்தியமில்லை- பாதுகாப்புச் செயலாளர்

0

யாழ்ப்பாணத்தில் நிலவும் தற்போதைய சூழ்நிலையில் ஊரடங்குச் சட்டத்தினை அகற்றுவது என்பது சாத்தியமற்ற விடயம் என பாதுகாப்புச் செயலாளர் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.

பாதுகாப்புச் செயலாளர் கமல் குணரட்ண இலங்கை விமானப்படைத் தளபதி எயார்மார்சல் சுமங்கல டயஸ் ஆகியோர் வடக்கில் முப்படையினரால் மேற்கொள்ளப்பட்டுவரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக ஆராய்வதற்காக யாழிற்கு விஜயம் செய்துள்ளனர்.

இதன்போது, வடக்கிலுள்ள அப்பாவி மக்களைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு எங்களிடம் உள்ளது. எனவே கொழும்பைப் போல தொற்று அதிகம் உள்ள இடமாக யாழ்ப்பாணம் காணப்படுகின்றது.

எனவே, தற்போதைய நிலைமையில் யாழ்ப்பாணத்தில் ஊரடங்கு அகற்றுவது என்பது சாத்தியமற்ற விடயம் என பாதுகாப்பு செயலாளர் யாழ்ப்பாணத்தில் வைத்து தெரிவித்துள்ளார். மேலும் யாழ்ப்பாண மக்களுக்கு தான் இரண்டு கோரிக்கைகளை முன்வைப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஒன்று ஊரடங்கு வேளையில் வீடுகளில் தனிமையாக இருங்கள்! மற்றையது உண்மையை பேசுங்கள்! ஏனெனில் நாங்கள் உங்களுக்காக சேவையாற்றத் தயாராக இருக்கின்றோம் எனத் தெரிவித்துள்ளார்.

எனினும், நீங்கள் உண்மையைக் கூறாது விட்டால் நாம் எந்தவித செயற்பாட்டிலும் ஈடுபட முடியாது. எனவே வடக்கில் உள்ள மக்களிடம் இந்த கோரிக்கைகளை முன்வைக்க விரும்புவதாக அவர் கூறியுள்ளார்.