யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்த இந்தியாவின் தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் இன்று(புதன்கிழமை) காலை உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தமிழகத்தின் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த வீரபுத்திரன் மணி (வயது 36) என்ற குடும்பத்தலைவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:-
“இந்தியாவின் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த குறித்த குடும்பத் தலைவர் இணுவில் பகுதியில் தங்கி இருந்துள்ளார்.
இந்நிலையில் அவருக்கு தலையில் கட்டி உள்ளதாக கூறி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் கடந்த 7 நாட்களுக்கு முன்னர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் அவர் இன்று காலை உயிரிழந்துள்ளார். இந்த இறப்பு தொடர்பான விசாரணைகள் தற்போது நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.