யாழில் வீடொன்றின் மீது தாக்குதல் – வீட்டிலிருந்தவர் படுகாயம்

0

யாழ்ப்பாணம் – மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாசியப்பிட்டியில் நீண்டகால பகை காரணமாக இருபதுக்கும் மேற்பட்டோர் கொண்ட குழு ஒன்று வீடொன்றின் மீது தாக்குதல் நடத்தியதுடன், அந்த வீட்டிலிருந்த ஒருவரை தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த தாக்குதலில் வீட்டிலிருந்த நபர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

இந்தச் சம்பவம் நேற்று(செவ்வாய்கிழமை) இரவு 9 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் இடம்பெற்ற வீட்டைச் சேர்ந்தவர்களுக்கும் மற்றொரு தரப்பை சேர்ந்தவர்களுக்கும் நீண்ட நாட்களாக முரண்பாடு இருந்து வந்துள்ளது. அந்தப் பகையைத் தீர்க்க ஒரு தரப்பை சேர்ந்த இருபதுக்கும் மேற்பட்டவர்கள் அந்த நபரின் வீட்டுக்குள் புகுந்து அட்டூழியத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அத்துடன் வீட்டில் இருந்த நபர் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அவர் உடனடியாக சங்கானை வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டார். சம்பவம் தொடர்பில் மானிப்பாய் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.