யாழ்ப்பாணம் உள்ளிட்ட பல்கலைக்கழகங்களில் PCR பரிசோனைகள்!

0

பல்கலைக்கழகங்களில் PCR பரிசோதனைகளை முன்னெடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க இதனைத் தெரிவித்துள்ளார்.

சுகாதார அமைச்சின் செயலாளரினால் எழுத்து மூலம் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த கோரிக்கை தொடர்பில், அனைத்து பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்களுக்கும் அறிவித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அனைவரும் அதற்கு இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க குறிப்பிட்டுள்ளார்.

இதற்கமைய இன்று (வியாழக்கிழமை) முதல் ஶ்ரீஜயவர்தனபுர, கொழும்பு மற்றும் யாழ்ப்பாணம் உள்ளிட்ட பல்கலைக்கழகங்களில் PCR பரிசோனைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.