யாழ். பல்கலைக்கழக நினைவுத் தூபி இடிக்கப்பட்டதில் சுரேன் ராகவனுக்கு தொடர்பா?

0

யாழ். பல்கலைக்கழக முள்ளிவாய்க்கால் நினைவிடம் இடிக்கப்பட்ட விடயத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேன் ராகவனுக்கு நேரடித் தொடர்பிருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் கருத்துத் தெரிவித்துள்ளார்.

யாழ்.பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த நினைவுத் தூபி இடிக்கப்பட்டமை தொடர்பில் இன்றைய தினம் கருத்துத் தெரிவிக்கையிலே அவர் இதனைக் கூறியுள்ளார்.

இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

நேற்றையதினம் இடம்பெற்ற குறித்த சம்பவம் ஒட்டுமொத்த தமிழர்களையும் வேதனைக்குள்ளாக்கியுள்ளது.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தை முன்னெடுப்பதற்காக கனடாவின் ஒட்டோவா சட்ட சபையில் முன்மொழிவொன்றை விஜய் தணிகாசலம் முன்வைத்திருந்தார்.

அதனை அவ்வாறு முன்னெடுக்கக்கூடாதென கடந்த நாடாளுமன்ற அமர்வின் போது நாடாளுமன்ற உறுப்பினர் சுரேன் ராகவன் கருத்துத் தெரிவித்திருந்தார்.

இவ்வடிப்படையில் பார்க்கும்போது நேற்றையதினம் இடம்பெற்ற சம்பவத்திற்கும் சுரேன் ராகவனிற்கும் நேரடித்தொடர்பிருப்பதாக தெரியவருகிறது என்று கூறியுள்ளார்.