யாழ் மாவட்டத்தில் 7 ஆசனங்களுக்கு 330 பேர் போட்டி!

0

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் யாழ். மாவட்டத்தில் 7  உறுப்பினர்களைத் தெரிவுசெய்வதற்காக 330 பேர் போட்டியிடவுள்ளனர்.

நாடாளுமன்றத் தேர்தலுக்ககாக வேட்பு மனுக்கள் தாக்கல் இன்று (வியாழக்கிழமை) நண்பகலுடன் நிறைவடைந்தது. நாடாளுமன்றத் தேர்தலில் போட்டயிடுவதற்காக 19 அரசியல் கட்சிகளும் 17 சுயேச்சைக் குழுக்களும் தமது வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்திருந்தன.

கிடைக்கப்பெற்ற வேட்புமனுக்களின் மீது 24 ஆட்சேபனைகள் மாவட்டத் தெரிவத்தாட்சி அலுவலருக்குச் சமர்ப்பிக்கப்பட்டது. எனினும் ஆட்சேபனைகள் அனைத்தும் நிராகரிக்கப்பட்டன.

வேட்பு மனுத்தாக்கல் செய்திருந்த 19 அரசியல் கட்சிகளினதும் வேட்பு மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. கிடைக்கப்பெற்ற சுயேட்சைக் குழுக்களில் மூன்று சுயேட்சைக் குழுக்களினதும் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டன. மொத்தமாக 19 அரசியல் கட்சிகளினதும் 14 சுயேச்சைக் குழுக்களினதும் வேட்பு மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன.