யுத்தக் குற்ற ஆதாரங்களை வெளியிட்டார் ஜனாதிபதி? எச்சரித்த பௌத்த அமைப்பு

0

அம்பாறையில் வைத்து அண்மையில் ஜனாதிபதி தெரிவித்திருந்த கருத்து தென்னிலங்கை அரசியலில் பெரும் சர்ச்சைகளை தோற்றுவித்துள்ள நிலையில், அது குறித்து பௌத்த அமைப்பு ஒன்று எச்சரிக்கை விடுத்துள்ளது.

அந்தவகையில் ஜனாதிபதி தெரிவித்திருந்த கருத்தானது இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் யுத்தக் குற்றச்சாட்டுகளை நிரூபிக்கும் வகையில் இருந்துள்ளதாக அந்த அமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது.

ஜனாதிபதி வெளியிட்ட கருத்தானது, இலங்கை ஆயுதப்படைகள் மற்றும் தளபதிகள் இழைத்ததாகக் கூறப்படும் யுத்தத் குற்றச்சாட்டுக்களை நிரூபிக்க கூடிய சட்சியாக அமைந்துள்ளது என ஹெல பொது சவிய அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

அம்பாறையில் இடம்பெற்ற நிகழ்வில் பேசிய ஜனாதிபதி, “விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன், தான் பாதுகாப்பு செயலாளராக இருந்த காலத்தில் பித்தளை சந்தியில் குண்டு வீசியதாகவும், எனினும் பணிகளை ஆரம்பித்த காலத்தில் பதிலளித்த விதத்தில் செயற்படும் திறன் இன்னும் தன்னிடம் காணப்படுவதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

”எனினும் நான் இறுதியில் பிரபாகரனை கொன்று இழுத்து வந்தேன். அந்த நிலைக்கு கொண்டு வர முடியும். எதற்கும் தயாராக இருக்கும் ஒரு கதாபாத்திரம் நான்” என தெரிவித்திருந்தார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் இந்த கருத்ததானது, நாட்டின் ஜனாதிபதியாக ‘இல்லாத பிரச்சினைகளை வரவழைப்பது’ போன்றது என ஹெல பொது சவிய அமைப்பின் தலைவர் புதுகல ஜினவன்ச தேரர் சுட்டிக்காட்டியுள்ளார்.