யூரோ 2020 சாம்பியன்ஸானது இத்தாலி!

0

யூரோ 2020 கால்பந்து தொடரில் இத்தாலி சம்பியனானது.

இங்கிலாந்து அணிக்கும், இத்தாலி அணிக்கும் இடையிலான இறுதிப் போட்டி லண்டன் வெம்ப்லி (Wembley) மைதானத்தில் இடம்பெற்றது.

இந்தப் போட்டியில், ஆட்டநேரத்தில் இரு அணிகளும், 1 க்கு 1 என்ற கோல் கணக்கில் சமநிலை பெற்றிருந்தன.

இதையடுத்து, வழங்கப்பட்ட மேலதிக நேரத்தில் இரு அணிகளும் கோல் எதனையும் பெறாத நிலையில், பெனால்ட்டி எனப்படும் சமன் நீக்கி மோதல் அடிப்படையில் போட்டி நிறைவு செய்யப்பட்டது.

இதன்போது, 3 க்கு 2 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்தை இத்தாலி வீழ்த்தியது. இதன்மூலம் 53 ஆண்டுகளின் பின்னர் இத்தாலி அணி, மீண்டும் யூரோ கிண்ணத்தை வென்றுள்ளது.

இதேநேரம், பாரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் 55 ஆண்டுகளின் பின்னர் மாபெரும் தொடர் ஒன்றின் இறுதிப் போட்டியில் பங்கேற்ற இங்கிலாந்து அணி, தோல்வியடைந்துள்ளது.