யோக்கர் பந்துவீசுவதில் என்னைவிட மலிங்கவே கில்லாடி…. அவரே எனது குரு – மனம்திறந்தார் பும்ரா

0

இந்திய அணியில் இடம்பிடிக்க இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல்) இளம் வீரர்களுக்கு பெரும் வாய்ப்பாக அமைந்துள்ளது.

அந்த இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் மூலம் இந்திய அணிக்கு ஏராளமான திறமை வாய்ந்த இளைஞர்கள் கிடைத்துள்ளனர்.

ஹர்திக் பாண்டியா, ஜஸ்பிரித் பும்ரா, ரிஷப் பண்ட், ஸ்ரேயாஸ் அய்யர் என சொல்லிக்கொண்டே போகலாம்.

இதில் ஜஸ்பிரித் பும்ரா மிகவும் ஸ்பெஷலான வீரர். தற்போது உலக பேட்ஸ்மேன்களின் கண்களில் விரலை விட்டு ஆட்டிக் கொண்டிருக்கும் ஒரு வீரர்.

இந்திய வீரர்கள் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலியடே இவரை எதிர்கொள்ள சற்று பயப்பட்டு கொண்டுதான் இருக்கின்றனர்.

இந்நிலையில் ஜஸ்பிரித் பும்ரா ஒரு பந்து வீச்சாளரை காட்டி அவர் தான் உலகிலேயே மிகச்சிறந்த யார்க்கர் வீசும் பந்துவீச்சாளர் என்று குறிப்பிட்டுள்ளார்.

மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வரும் ஜஸ்பிரித் பும்ரா பந்துவீச்சில் மிகச் சிறப்பான வீரராக பார்க்கப்படுகிறார்.

இவர் வீசும் யார்க்கர்களை அவ்வளவு எளிதாக அடித்து விட முடியாது. கொரோனா காரணமாக கிடைத்திருக்கும் ஓய்வு நேரத்தில் டச் விட்டு போகக்கூடாது என வாரத்தில் 6 நாட்கள் பயிற்சி செய்து வருகிறார் பும்ரா. இந்நிலையில் இது குறித்து சமீபத்தில் சமூகவலைதளத்தில் பேசியுள்ளார்.

இவற்றைப் பற்றி பேசிவிட்டு தனக்கு யார்க்கர் வீச சொல்லிக் கொடுத்த அந்த ஒரு பந்து வீச்சாளரை பற்றியும் பேசியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் :

நான் பந்துவீச்சின் பல யுத்திகளை லசித் மலிங்காவிடம்தான் கற்றுக் கொண்டுள்ளேன். மும்பை இந்தியன்ஸ் அணி எனக்கு இந்த வாய்ப்பை உருவாக்கிக் கொடுத்துள்ளது.

இலங்கையின் லசித் மலிங்காதான் உலகிலேயே யார்க்கர் பந்து வீசுவதில் கில்லாடி. அவர் அந்த பந்தை மிகச் சிறப்பாக வீசுவார்.

எனக்கு அந்த பந்தை சரியாக வீச உதவியாக இருந்தது மலிங்காதான் என்று கூறியுள்ளார் ஜஸ்பிரித் பும்ரா.

இந்த பதிவினை மும்பை இந்தியன்ஸ் அணி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளது.