ரமழான் மாத தலை பிறையை தீர்மானிக்கும் மாநாடு இன்று!

0

ஹிஜ்ரி 1441 ஆம் ஆண்டிற்கான ரமழான் மாத தலை பிறையை தீர்மானிக்கும் மாநாடு இன்று(வியாழக்கிழமை) நடைபெறவுள்ளது.

மஹ்ரிப் தொழுகையின் பின்னர் கொழும்பு பெரிய பள்ளிவாசலில் இந்த மாநாடு இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ரமழான் மாத தலை பிறையை தீர்மானிக்கும் இந்த மாநாட்டில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை, பிறைக்குழு , முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் மற்றும் வக்பு சபை ஆகியவற்றின் உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொள்ளவுள்ளனர்.

எனினும், நாட்டின் தற்போதைய நிலையை கருத்திற்கொண்டு குறிப்பிட்ட உறுப்பினர்களுக்கு மாத்திரமே பிறை தீர்மானிக்கும் மாநாட்டில் பங்குபற்றுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.