ரவூப் ஹக்கீமுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த15 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பி.சி.ஆர்.பரிசோதனை

0

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீமுடன் நெருங்கிய தொடர்புகளை பேணிய 15 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இவ்வாறு அடையாளம் காணப்பட்ட அனைத்து பி.சி.ஆர்.பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு, சுய தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளதாக  நாடாளுமன்ற படைக்கள சேவிதர் நரேந்திர பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

மேலும் ரவூப் ஹக்கீம், தான் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாக நேற்றைய தினம் தனது ருவிட்டர் பக்கத்தில் அறிவித்திருந்தார்.

அத்துடன் தன்னுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்களையும் சுகாதார அதிகாரிகளின் அறிவுறுத்தலுக்கமைய செயற்படுமாறும் அவர் கோரியிருந்தார்.

இதேவேளை இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகரவும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகிய நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.