அண்மையில் நாட்டுக்கு வருகைதந்த ரஷ்ய பிரஜை ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்த நிலையில் நடத்தப்பட்ட பீ.சீ.ஆர் பரிசோதனையின் போதே தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக மாத்தறை மாவட்ட பிரதம பொது சுகாதார பரிசோதகர் எராஜ் வீரசூரிய தெரிவித்துள்ளார்.
இதனை அடுத்து அவர் ஹம்பாந்தோட்டை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவர் அண்மையில் மத்தள விமான நிலையத்தின் ஊடாக நாட்டுக்கு வருகைத்தந்துள்ளதுடன், அவருடன் மேலும் 13 பேரும் நாட்டை வந்தடைந்தனர்.
ஏனையவர்கள் அனைவரும் மாத்தறை பொலிஹேன பகுதியில் உள்ள தனிமைப்படுத்தல் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இவ்வாறு அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களில் அவர் தங்கியிருந்த விடுதியின் ஊழியர்களும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.