ராஜாங்கணையில் பாடசாலை மாணவர்கள் உட்பட 30 பேர் தனிமைப்படுத்தல்

0

இந்நாட்டில் இனங்காணப்பட்டுள்ள கொவிட் 19 தொற்றாளர்களின் எண்ணிக்கை 2882 ஆக அதிகரித்துள்ளது.

நேற்றைய தினத்தில் (13) ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து வந்த நபரொருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை, இந்நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் இதுவரை 2646 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

தற்போதைய நிலையில் 225 கொவிட் நோயாளர்கள் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அவர்களில் அதிகமானோர் கந்தகாடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் சிகிச்சைப் பெற்று வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை, ராஜாங்கணை பிரதேசத்தில் பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் உட்பட 30 பேரை தனிமைப்படுத்த பிரதேச சுகாதார அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

குறித்த பிரதேசத்தில் பாடசாலை மாணவர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதை தொடர்ந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதேவேளை, வௌிநாட்டுகளில் இருந்து 66 பேர் இன்று காலை இலங்கை வந்துடைந்துள்ளனர்.

இவ்வாறு வருகை தந்த அனைவரும் முப்படையினரால் பராமரிக்கப்படும் தனிமைப்படுத்தல் முகாம்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, இன்றைய தினத்தில் தனிமைப்படுத்தல் செயற்பாட்டை நிறைவு செய்த மேலும் 82 பேர் விடுவிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.