ரிஷாட் பதியுதீன் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலை!

0

முன்னாள் நாடாளுமன்ற ரிஷாட் பதியுதீன் இன்று (வியாழக்கிழமை) காலை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார்.

மன்னாரில் உள்ள காணி விவகாரம் தொடர்பாக வாக்குமூலம் வழங்குவதற்காகவே அவர் இவ்வாறு முன்னிலையாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் தொடர்பாக ஏற்கனவே அவரது சகோதரர் மற்றும் சட்டத்தரணி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், ரிஷாட் பதியுதீன் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.