முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் இன்று (வியாழக்கிழமை) ஆஜராகியுள்ளார்.
கடந்த ஆண்டு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பாக வாக்குமூலம் வழங்குவதற்காக அவர் குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு சென்றுள்ளார்.
இதுகுறித்த தகவலை பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஜாலிய சேனாரத்ன தெரிவித்துள்ளார்.