ரிஷாட் பதியூதீனை கைது செய்ய 6 பொலிஸ் குழுக்கள் அனுப்பி வைப்பு

0

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீனை கைது செய்ய 6 பொலிஸ் (சீ.​ஐ.டி) குழுக்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மன்னார் மற்றும் கொழும்பிலுள்ள அவரது வீடுகளுக்கே இவ்வாறு 6 பொலிஸ்  (சீ.​ஐ.டி) குழுக்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனை கைது செய்ய நீதிமன்றத்திடம் இருந்து பிடியானை பெற்றுக்கொள்ளுமாறு பதில் பொலிஸ் மா அதிபருக்கு சட்டமா அதிபர் நேற்று(செவ்வாய்கிழமை) உத்தரவு பிறப்பித்திருந்தார்.

பொதுநிதியை முறைகேடு செய்தமை மற்றும் தேர்தல் விதிமுறைகள் சட்டங்களை மீறியமை தொடர்பிலேயே அவரை கைது செய்யுமாறு சட்டமா அதிபர் உத்தரவிட்டிருந்தார்.

இதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனை கைது செய்ய பிடியாணை பிறப்பிக்குமாறு முன்வைக்கப்பட்ட கோரிக்கையை நேற்று நீதிமன்றம் நிராகரித்திருந்தது.

மேலும் அவரை பிடியானை இல்லாமல் பொலிஸாரிற்கு கைது செய்ய முடியும் எனவும் கோட்டை நீதவான் தெரிவித்திருந்தாரை்.

இந்தநிலையிலேயே முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியூதீனை தேடி 6 பொலிஸ் (சீ.​ஐ.டி) குழுக்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

இலங்கைப் போக்குவரத்து சபைக்கு சொந்தமான 222 பேருந்துகளைப் பயன்படுத்தி, ரிஷாட் பதியுதீன் ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்க புத்தளத்திலிருந்த தனது ஆதரவாளர்களை மன்னாருக்கு அழைத்துச் சென்றமை சி.ஐ.டி.யின் விசாரணைகளில் வெளிப்படுத்தப்பட்டது.

அந்த நேரத்தில் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சராக இருந்த ரிஷாட் பதியூதீன், 9.5 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான அமைச்சின் பணத்தை செலவிட்டதாகவும் கூறப்படும் சம்பவம் தொடர்பாகவே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.