ரிஷாட் வீட்டில் மர்மமாக உயிரிழந்த 3வது பெண் − வெளியான மற்றுமொரு பரபரப்பு சம்பவம்

0

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீனின் வீட்டில் பணிப் புரிந்த 16 வயதான ஹிஷாலினிக்கு மேலதிகமாக, மேலும் இரு பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தமை தொடர்பில் தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.

பொலிஸாரை மேற்கோள்காட்டி, இந்த செய்தியை வெளியாகியுள்ளது.

இவர்களில் ஒரு பணிப் பெண், ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்துக்கொண்டுள்ளதுடன், மற்றைய பெண் திடீர் சுகயீனமுற்று உயிரிழந்துள்ளமை விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

தற்போது கைது செய்யப்பட்டுள்ள இடைதரகரினால், ரிஷாட் பதியூதீனின் வீட்டிற்கு 11 மலையக பெண்கள் வேலைக்கு அழைத்து வரப்பட்டுள்ளதுடன், அவர்களில் மூவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளனர்.

ஏனைய 8 பெண்களும், ஏதேனும் ஒரு வகையில் துன்புறுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்களா என்பது குறித்து ஆராய்வதற்காக, விசாரணைகளை நடத்தி வரும் பொலிஸ் குழு, அந்தந்த பெண்களின் வீடுகளுக்கு செல்ல தீர்மானித்துள்ளது.

ரிஷாட் பதியூதீனின் வீட்டில் பணிப்புரிந்த மற்றுமொரு பெண், ரிஷாட் பதியூதீனின் மனைவியின் சகோதரனினால் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டமை விசாரணைகளில் தெரியவந்த நிலையில், சந்தேகநபர் கைது செய்யப்பட்டு தடுப்பு காவலில் வைத்து தற்போது விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றார்.